இந்தியாவுக்கு செல்வதற்கு வாழ்நாள் விசாவை கொண்டிருக்கும் OCI வெளிநாடு வாழ் இந்தியர்கள் புதிய கடவுச்சீட்டை பெறும்போது 20 வயதுக்கு உட்பட்டோர் அல்லது 50 வயதுக்கு உட்பட்டோர் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டோர் என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் தமது OCI அட்டையையும் தற்போதைய தோற்றத்துடன் கூடிய புகைப்படத்துடன் மீளப்பெற வேண்டும் என ஏற்கனவே உள்ள விதிமுறையை இந்திய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
இவ்விதிமுறையின் பிரகாரம் OCI அட்டையை மீளப்பெறவேண்டியவர்களுக்கு ஜூன் 30வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட விதிகளுக்கமைய, இவ் அட்டையை இதுவரை மீளப் பெறாதவர்கள் இக்கால எல்லைவரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாயின் தற்போதைய OCI அட்டையில் குறிப்பிட்டுள்ள கடவுச்சீட்டையும் தவறாது கைவசம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வட்டையை புதிய புகைப்படத்துடன் மீளப்பெற விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை தெளிவுபடுத்துவதற்கான ஒரு செயலமர்வை கோப்பியோ இலங்கை அமைப்பு இன்று திங்கட்கிழமை மாலை 5.45 மணிக்கு கொழும்பு 13, விவேகானந்த சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. விபரங்களை அறிய ஆர்வமுள்ளோர் இதில் பங்குபெறலாம். அனுமதி இலவச மாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM