(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித  உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர்  எதிர்­வரும் பெப்­ர­வ­ரி ­மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திக­தி­வரை   நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்­தக்­கூட்டத் தொடரில் இரண்டு முக்­கிய அறிக்கைகள் வெளியி­டப்­ப­ட­வுள்­ளன.  

43ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடர்­பான அவ­தா­னிப்பு அறிக்­கையை  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லட் முன்­வைக்­க­வுள்ள நிலையில்  இலங்­கைக்கு கடந்த வருடம் விஜயம்  மேற்­கொண்ட  சுதந்­திரம் மற்றும் மத நம்­பிக்கை தொடர்­பான விசேட அறிக்­கை­யா­ளரின் அறிக்­கையும் வெளியி­டப்­ப­ட­வுள்­ளது.

இம்­முறை 43  ஆவது கூட்டத் தொடர் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக உள்­ளது. காரணம் 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன்30/1 என்ற பெயரில்  நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017ஆம் ஆண்டு   34/1 என்ற பெய­ருடன்  மேலும்  இரண்டு வரு­டங்­க­ளுக்கு  நீடிக்­கப்­பட்ட பிரே­ரணை  இவ்­வ­ருடம் மார்ச் மாதம் மேலும் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக 40/1 என்ற பெயரில் நீடிக்­கப்­பட்­டது.

இந்த   பிரே­ரணை  கடந்த ஒரு­வ­ரு­ட­கா­லத்தில்   அல்­லது கடந்த நான்கு வரு­ட­கா­லத்தில் எவ்­வாறு அமு­லாக்­கப்­பட்­டது  என்­பது தொடர்­பா­கவே  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் இந்தக்  கூட்டத் தொடரில் தமது இலங்கை குறித்த  அவ­தா­னிப்பு அறிக்­கையை முன்­வைக்க இருக்­கிறார். இதில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்கள் மற்றும் பின்­ன­டை­வுகள் தொடர்­பாக  மனித உரிமை ஆணை­யாளர்  பரிந்­து­ரை­களை முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அரச தூதுக்­குழு

இம்­முறை  ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் பல்­வேறு தரப்­பினர் பங்­கேற்­க­வுள்­ளனர். இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில்  வெளி­வி­வ­கார அமைச்சர் அல்­லது மனித உரிமை  தொடர்­பான அமைச்சர்  தலை­மை­யி­லான உயர் மட்ட  தூதுக்­கு­ழு­வினர் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்­ளனர்.     இலங்கைத் தூதுக்­கு­ழு­வினர்  ஜெனி­வாவில் மனித  உரிமை ஆணை­யா­ள­ரையும் சந்­தித்­து­பேச்­சு­வார்த்தை நடத்த  எதிர்­பார்ப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச நாடு­களின் தூது­வர்­க­ளையும் அரச தரப்­பினர் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.  

தமிழர் தரப்பு  

இதே­வேளை  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழு­வொன்றும்  சட்­டத்­த­ர­ணி­களும்  இம்­முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்­ள­துடன்  பொறுப்­புக்­கூறல் தொடர்பில்  அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரையும் சர்­வ­தேச நாடு­களின்     பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து தமிழ் தரப்பு பிர­தி­நி­திகள் பேச்­சு­வார்த்தை  நடத்­து­வார்கள்.

அத்­துடன்  சர்­வ­தேச  மனித  உரிமை அமைப்­புக்­களும்  அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும்   இந்­தக்­கூட்டத் தொடரில் பங்­கேற்று  உரை­யாற்­ற­வுள்­ளன.  குறிப்­பாக  சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம்   மற்றும் சர்­வ­தேச மன்­னிப்பு சபை  போன்ற   மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள்   இலங்கை தொடர்பில்  உரை­யாற்­றுவர்  என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கடந்த  2015 ஆம் ஆண்டு  இலங்கை குறித்த  30-1 என்ற  பிரே­ரணை  ஜெனி­வாவில்  நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு  அப்­போ­தைய இலங்கை  அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அதா­வது 2017 ஆம் ஆண்­டா­கும்­போது இந்த பிரே­ர­ணையை நிறை­வேற்­ற­வேண்டும் என்று  அதில் கோரப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அக்­கா­லப்­ப­கு­தியில்  பிரே­ரணை  முழு­மை­யாக நிறை­வே­றா­ததன் கார­ண­மாக   2017 ஆம் ஆண்டு   30-1 என்ற பிரே­ரணை      மேலும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு நிறை­வேற்­றப்­பட்­டது.   அது 34-1 என்ற பிரே­ரணை ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.   2019 ஆம் ஆண்­டா­கும்­போது 30-1 என்ற பிரே­ர­ணையை  முழு­மை­யாக அமுலாக்கவேண்டும் என்று  தெரிவித்தே  34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற  பிரேரணை  முழுமையாக  நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது  ஆரம்பத்தில்  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே  தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது.