இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டாவதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சிம்பாப்வே ஹராரே மைதா­னத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

சிம்­பாப்வேக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி­யா­னது அந்­நாட்டு அணி­யுடன் இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­கின்­றது. 

இந்தத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை முடி­வு­பெற்­றது. 

இந்தப் போட்­டியில் இலங்கை அணி அபா­ர­மான வெற்­றியைப் பதிவு­செய்­தது. இந்­நி­லையில் இவ்­விரு அணி­க­ளு­க்­கி­டை­யி­லான கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

இந்தப் போட்­டி­யிலும் இலங்கை வெற்­றி­பெற்றால் சிம்பாப்வேக்கு எதி­ரான தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்­ற­மு­டியும். 

இலங்கை அணி தற்­போ­துள்ள பல­மான நிலையில் இன்று ஆரம்­பமா­க­வுள்ள போட்­டியிலும் வெற்­றியைப் பதி­வுசெய்ய வாய்ப்­புள்­ளது. இன்று இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள போட்­டியில் ஆதிக்கம் செலுத்­தப்­போ­வது யார் என்­பதைப் பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.