(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க இலங்கை அரசாங்கம் மறுத்தமைக்கு  அமெரிக்க காங்கிரஸ் குழுவின் வெளிவிவகார கொள்கை பிரிவு அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 

ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் உப குழுவின் சந்திப்பின் போதே இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கும் - அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் சாதகமான மாற்றங்கள் வெளிப்பட்டதாக உப குழுவின் தலைவர் மெட் சல்மொன் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இலங்கை கடந்த கால போர் சூழலின் போதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு கூறும்  கடப்பாட்டில் தோல்வியடைந்துள்ளமை சர்வதேச நீதிபதிகளின் நிராகரிப்பின் ஊடாக வெளிப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.