வடக்கு சிரிய நகரமான அசாஸில் வெடிபொருள் ஏற்றிச் சொன்ற லொறியொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த விபத்துக் காரணமாக மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அலெப்போவின் வடக்கே அசாஸ் நகரில் உள்ள ஒரு உணவகம் மற்றும் ஒரு எரிவாயு நிலையத்தின் முன்பே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.