சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 90 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன நாட்டு வைத்திய தாதி ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க பாதுகாப்பான ஆடை மற்றும் முகமூடி அணித்தவாறு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த தாதி, 

குறித்த காணொளியில், நான் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பமான பகுதியில் உள்ளேன். ஹூபே மாகாணத்தின்  ஹூஹேன் பகுதியிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில்  தற்போது 90 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீன அரசு வெறும் 1975 பேர் மாத்திரமே குறித்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தள்ளது.

மேலும், தற்போது இந்த காணொளியை நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பீர்களாயின் தயவு செய்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள், விருந்துபசாரங்களை செய்யாதிர்கள், வெளியில் உணவு உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வருடத்திற்கு ஒரு முறை, சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருந்தால், அடுத்த ஆண்டு உங்கள் குடும்பத்தை மீண்டும் ஆரோக்கியமாக சந்திக்க முடியும். எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.