ஈரானின் வடக்கு பகுதியில் கோர்கஸ்டன் நகரிலுள்ள கோர்கோன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென தீ பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

கோர்கானில் இருந்து தெஹ்ரானுக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினிலேயே இவ்வாறு தீ பற்றி எரிந்தள்ளது.

அத்தோடு குறித்த விமானத்தை அதே விமானநிலையத்தில் தரையிரக்கபப்ட்ட பின் பயணிகள் அணைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தீ பற்றியமைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் அந்நாட்டு அதிகாரிகள்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.