5 முதல் 10 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பிரமாண்டமான விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லானது பூமியை தாக்கும் வாய்ப்பு 0.000001%  ஆக கணப்படுவதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நாசா விண்வெளி தரவுகளை மேற்கொள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்துபோக வழிவகுத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வகையான விண்கல் ஒவ்வொரு 50 முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது கிரகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியை கடக்கவுள்ள இந்த விண்கல்லானது சிறிய நகரங்களேயோ அல்லது முழு நகரங்களையே அழிக்க கூடிய வல்லமை பெற்றிருந்தாலும், நமது கிரகத்தில் மோதுவதற்கான  0.000001%  ஆகவுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

நாசா தற்போது பூமிக்கு அருகாமையில் செல்கின்ற விண்கல்களினது தரவுகளை பதிவுசெய்து, அதனால் உண்டாகும் ஆபத்‍தை என்பவற்றை அட்டவணைப்படுத்தி வருகின்றது.

அட்டவணையில் உள்ள தரவுகளின் படி எந்தவொரு விண்கல்லும் தற்போது எதிர்காலத்தில் நமது கிரகத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு பாரியதாகவே அல்லது ஆபத்தானதாகவோ சுட்டிக்காட்டப்படவில்லை.