ஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை 

Published By: Ponmalar

10 Jun, 2016 | 06:25 PM
image

வலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர்  என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி   இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல விதமான காரணங்களை கூறி தடையாகவுள்ளனர்.

குறிப்பாக மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதில் கூட முன்னர் நடந்ததாக கூறப்படும் காரணத்தை இராணுவம் கூறிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும் இராணுவமே இடம்கொடுக்க மறுக்கிறது என நான் நம்புகின்றேன்.

எனவே இவ் விடயத்தில் மக்களுடைய எதிர்கால வாழ்க்கையை கருத்திலெடுத்து மக்கள் தலைவர்களும் இராணுவமும் போதிய கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு  இதற்கு ஒர் முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் தமது மனோநிலையை எடுத்துகாட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதில் பல விதமான சிக்கல்கள்  உள்ளன. எனவே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55