(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒன்றிணைந்து செயற்பட்டால் அரசாங்கத்தை பொதுத்தேர்தலில் மாற்றியமைக்க முடியும். அதற்காக புதிய திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்லவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு இன்று கொழும்பு கண்காட்சி பண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டடார்.

தற்போது நாங்கள் எமது தவறுகளை திருத்திக்கொண்டு புதிய வடிவில் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயாராக வேண்டும். ஜனாதிபதி தேர்தல் போன்று இறுதி நேரம்வரை பார்த்துக்கொண்ருக்க முடியாது. கட்சிக்கு தேவையானதை ஆதரவாளர்கள் கேட்கும்போது அதனை வழங்காவிட்டால், அப்போது ஆதரவாளங்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் அரசாங்கம் எமக்கு எதிராக மேற்கொண்ட பிரசாத்தில் பிரதான இரண்டு விடயங்கள் தான் மத்திய வங்கி மோசடி. அடுத்தது ஏப்ரல் தாக்குதல். இந்த இரண்டில் ஒன்றுக்காவது இதுவரை அரசாங்கம் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவில்லை. 

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசாங்கம் குடும் ஆட்சியை மேற்கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.