மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பறெ்ற தாக்குதலில் 19 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டடுள்ளதோடு , 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த தாக்குதல்கள் அந்நாட்டின் சோகோலோவில் உள்ள இராணுவ தளத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

ஜிஹாத் அமைப்பினர் நடத்திய தாக்குதலிலேயே இவ்வாறு 19 இராணுத்தினர் உயிரிழந்தள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் இவ்வாறு சரிமாரியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இராணு முகாமில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்குள்ள ஆயுதங்களையும் எடுத்துச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.