கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் படைகள் தலிபானியர்களுக்கு எதிராக மேற்கொண்ட தரை வழி மற்றும் வான் வழித்  தக்குதல்களில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஒன்பது மாகணங்களிலும அரச படையினர் 13 தரை வழித் தாக்குதல்களையும் 12 வான் வழித் தாக்குதல்களையும் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தியுள்ளனர்.

இதன்போதே 51 தலிபானியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 13 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் இந்த சம்பவங்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

எனினும் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பால்கில் உள்ள உள்ளூர் அதிகாரிகள், வான்வழித் தாக்குதலில் குறைந்தது மூன்று பெண்களும் நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இதன் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றை குறித்த பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.