(க.கமலநாதன்)

எமது நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியமாகவுள்ளது. எனவே சகலரதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஏகமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இரண்டு வருடங்கள் நிறைவடையும் வரையில் அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எதனையும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது. மாறாக நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த ஆட்சியையையே முன்னெடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரைாயற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,