கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டமும், கண்டன பேரணியும் 

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 05:14 PM
image

 கொட்டகலை நகரில் இன்று 26.01.2020 காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும், கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து “சட்டவிரோதமான மது விற்பனையால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்” எனும் தொனிப்பொருளில் மலையக இளைஞர், யுவதிகள் சிலரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பாதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு கொட்டகலை ரயில்வே கடவைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கொட்டகலை பிரதேச சபை வரை சென்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

மலையகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலையால், தமது பொருளாதாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அத்தோடு, தந்தையின் மது போதை காரணமாக கடந்த 23ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொட்டகலை மேபீல்ட் பிரதேச யுவதியின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் இதுபோன்ற சம்பவம் இடம்பெறாத வண்ணம் மலையகத்தில் மது ஒழிப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மலையகத்தில் உள்ள சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளை ஒழிக்குமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது, பத்தனை பொலிஸ் நிலையம், கொட்டகலை பிரதேச சபை, மனித உரிமை ஆணைக்குழு ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது.

மேலும், சட்டவிரோதமான மதுபானசாலைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுவரி திணைக்களம் மற்றும் விசேட மது ஒழிப்பு பிரிவினரிடமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44