(எம்.மனோசித்ரா)
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரங்களை மறந்து ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டு ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுமே இன்று மோசடிக்காரர்களாகியுள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
மத்திய வங்கி பிணை முறி மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது.
ஆனால் தற்போதே அவர்களே அதிலிருந்து பின்வாங்குகின்றனர். இதன் மூலம் ஜனாதிபதியும் பிரதமரும் மோசடிக்காரர்களாகியுள்ளனர். தற்போது வங்கிகளில் பண மோசடிகள் இடம்பெறுவதில்லை. மாறாக மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை மூலம் பணம் கொள்ளையிடப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அவற்றியிலேயே அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மஹிந்தவுக்கும் கோதாபயவுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் யாரும் கேள்வியெழுப்புவதில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அக்கிராசன உரையன்று பாராளுமன்ற சம்பிரதாயப்படி சபாநாயகரும் பிரதமரும் இணைந்தே அவரை வரவேற்றிருக்க வேண்டும். அதுவே வழமையாக பின்பற்றப்படும் முறைமையாகும். ஆனால் இந்த முறை அவ்வாறு பிரதமரால் ஜனாதிபதி வரவேற்கப்படவில்லை. இது குறித்து யாரும் கேள்வியெழுப்பவும் இல்லை என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM