இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதக்கு -20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஓட்டங்களை 132 குவித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது நியூஸிலாந்துடன் 5 இருபதுக்கு - 20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை அக்லாந்தில் ஆரம்பமானது இருபதுக்கு -20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.

இந் நிலையில் இன்றைய தினம் அக்லாந்தில் ஆரம்பான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 132 ஓட்டங்களை குவித்தது.

நியூஸிலாந்து அணி சர்பில் மார்டின் குப்டீல் 33 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 26 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 14 ஓட்டங்களையும், கிரேண்ட்ஹோம் 3 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 18 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க டீம் சைபர்ட் 33 ஓட்டங்களுடனும், மிட்செல் சாண்டனர் எதுவித ஒட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும், சர்துல் தாகூர், பும்ரா மற்றும் சிவம் டூப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.