திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு லட்டு தயாரிக்கும் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள லட்டுகள் வீணடைந்துள்ளன. 

தீயணைப்பு முயற்சியின்போது இரசாயனம் பட்டதில் 20 லட்சம் ரூபா மதிப்புடைய லட்டுகள் வீணடைந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்திற்கு அருகே லட்டு தயாரிக்கும் மையம் உள்ளது. 

இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் இணைந்து தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். 

அப்போது தீயணைப்பான் கருவியிலிருந்து வெளியான இரசாயனம் காரணமாக அங்கிருந்த 20 இலட்சம் பெறுமதியான லட்டுகள் மற்றும் மூலப் பொருட்கள் வீணடைந்தன. அவற்றை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் அழிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. தீவிபத்து காரணமாக லட்டு தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.