எஸ்.வினோத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் இன­வாத சிந்­த­னை­யுடன் செயற்­ப­டு­வதால் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் பின்னர் அமைக்­கப்­படும் அர­சாங்­கத்தில் அக்­கட்­சிகள் இணைத்­துக்­கொள்­ளப்­பட மாட்­டாது. மேலும் தலை­வர்கள் ஊடாக அன்றி நேர­டி­யாக மக்கள் மத்­தியில் சென்று அவர்­க­ளுக்கு சேவை செய்ய அர­சாங்கம் எதிர்ப்­பார்ப்­ப­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார். 

மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பு ஒன்றின் போதே அமைச்சர் இதனை தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் இன­வாத சிந்­தனை கொண்ட கட்­சி­க­ளாக உள்ளன் அவர்கள் இன­வாத சிந்­த­னை­யு­ட­னேயே தொடர்ந்தும் செயற்­ப­டு­வார்கள் என கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கிய பல கட்­சிகள் கரு­து­கின்­றன. எனவே எதிர்­வரும் பொதுத்­தேர்­தலை தொடர்ந்து அமைக்­கப்­படும் புதிய அர­சாங்­கத்தில் அக்­கட்­சிகள் எவ்­வ­கை­யிலும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.

எனவே தலை­வர்கள் இன்றி நேர­டி­யாக மக்­க­ளுடன் செயற்­ப­டவே நாம் விரும்­பு­கின்றோம். போது­மக்கள் இன­வாத சிந்­தனை கொண்­ட­வர்கள் அல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்­பொ­ழுதும் இன­வா­த­மாக செயற்­பட மாட்­டார்கள் என்றே நான் நம்­பு­கின்றேன்.

இருப்­பினும் மக்­களின் வாக்கை பெறு­வ­தற்­காக இன­வாத அர­சியல் தலை­வர்கள் மக்­க­ளையும் இன­வாத பக்­கத்­திற்கு திசைத்­தி­ருப்­பு­கின்­றனர்.

சிங்கள்,தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இன­வாத ரீதியில் மக்­களை தம்­வசம் படுத்த முயற்­சிக்­கின்­றனர். 

எனவே மக்கள் புத்­தி­சா­துர்­ய­மாக சிந்­தித்து செயற்­பட வேண்டும். அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்ற வகையில் தமிழ் , முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கும் எதிர்வரும் காலத்தில் மேலும் பல சேவைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.