இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதில், அசாமில் திப்ரூகார் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் திப்ரூகார் நகரில் பஜார் பகுதியில் பிரதான வீதிகக்கு அருகே இன்று காலை கடை ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. 

குண்டு வெடிப்பு குறித்த பாதிப்புகள் எதுவும் வெளியிடப்பட வில்லை, எனினும் இது குறித்து மேலதீக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

இதே போன்று, நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில்  2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்வாமா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.