இந்தியாவின், சென்னையில் தனது சகோதரியை கொலை செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக 'The New Indian Express' இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஆர். தரகேஸ்வரி (உயிரிழந்த நபர்) என்பவர் தனது தாய் மற்றும் மகனுடன் சென்னையின் வளசரவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இந் நிலையில் இலங்கையில் வசிக்கும் அவரது சகோதர் குகதாசன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சபரிமலையாத்திரை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

யாத்திரை முடிந்து சென்னையில் உள்ள தனது சகோரியின் வீட்டுக்கு சென்று அங்கு தங்கியிருந்து மது அருந்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது   தரகேஸ்வரியுடன் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் அவரது தாயையும் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் தெரிவித்துள்ளதுடன், இதன் பின்னர் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.