எம்.மனோ­சித்ரா

தலை­மைத்­துவம் மற்றும் பிர­தமர் வேட்­பாளர் உள்­ளிட்ட பல்­வேறு சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் நாளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட­வுள்­ளது. கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐ.தே.க தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் கூட­வுள்ள மத்­திய செயற்­கு­ழுவில் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­துவம் தொடர்பில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு வாக்­கெ­டுப்­பின்றி தீர்­வினை வழங்­கு­மாறு கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள், முன்னாள் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்­றத்தின் பின் வரிசை உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இந்த கோரிக்கை தொடர்­பிலும் நாளைய மத்­திய குழுவில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இதன் போது குறிப்­பாக ஜனா­தி­பதித் தேர்தல் நிறை­வ­டைந்­ததன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை மீண்டும் பிரதி தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்கு கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீர்­மா­னித்­தி­ருக்­கிறார்.

பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க, தேசிய அமைப்­பாளர் நவீன் திஸா­நா­யக்க , பொதுச் செய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய ஆலோ­சனை சபையின் அனு­ம­தி­யு­ட­னேயே ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­குழு உறுப்­பி­னர்­களை நிய­மித்­தி­ருக்­கிறார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தான பத­விகள் தொடர்­பி­லான தெரி­வுகள் தற்­போது நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யி­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் நிறை­வ­டைந்­ததன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை மீண்டும் பிரதி தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்கும் கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார்.

மேலும் முரண்­பா­டுகள் இன்றி தலைமைத்துவம் குறித்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருகின்றது என்று முன்னாள் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.