இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் புணர்நிர்மாண பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லியின் பஜன்பூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டாம் மாடியில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன் எட்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கு சரியான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

செலவுகளைக் குறைப்பதற்காக பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து, மலிவான பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள் எழுப்பப்படுவது இந்தியாவில் நிகழும் கட்டிட  இடிபாடுகளுக்கு  முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.