ஈரான் விண்வெளியில் செலுத்த ஆறு செயற்கைக் கோள்களை தயாரித்துள்ளதாக ஈரானின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் மொஹமட் ஜாவாத் அசாரி ஜஹ்ரோமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் ஒரு செய்மதியை வடிவமைக்கும் நடவடிக்கையைானது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜாவாத் அசாரி ஜஹ்ரோமி தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய நாட்காட்டியின் முறைப்படி மார்ச் 19 ஆம் திகதி இந்த செய்மதிகளை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்த திட்டமிட்டுள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இமாம் கோமெய்னி ஈரானின் ராக்கெட ஒன்று வெடித்ததாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் ஈரானிய அதிகாரிகள் இதனை மறுத்தமையும் குறிப்படத்தக்கது.