இந்­தி­யாவின் 71ஆவது குடி­ய­ரசு தின விழா இன்று 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. டெல்லியில் நடைபெறும் குடி­ய­ரசு தின விழாவில் பிரேஸில் ஜனா­தி­பதி ஜெய்ர் போல்­ச­னாரோ சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொள்ளவுள்ளார்.

பிரிக்ஸ் கூட்­ட­மைப்பு நாடு­களின் 11ஆவது உச்சி மாநாடு பிரேஸில் தலை­நகர் பிரே­ஸி­யாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடை­பெற்­றது.  இரண்டு நாள் நடை­பெற்ற இம்மாநாட்­டின் போது, பிரேஸில் ஜனா­தி­பதி ஜெய்ர் போல்­சனா­ரோவை பிர­தமர் நரேந்­திர மோடி சந்­தித்து பேசி­யுள்ளார்.

இச் சந்­திப்­பின்­போது, டெல்­லியில் நடை­பெறும் இந்­திய குடி­ய­ரசு தின விழாவில் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்­கு­மாறு போல்­ச­னா­ரோ­வுக்கு பிர­தமர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்­றுக்­கொண்­ட பிரேஸில் ஜனா­தி­பதி ஜெய்ர் போல்­ச­னாரோ, இன்று நடை­பெறும் 71ஆவது குடி­ய­ரசு தின விழாவில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொள்­ள­வுள்ளார்.

இதற்­காக பிரேஸில் ஜனா­தி­பதி ஜெய்ர் போல்­ச­னாரோ நேற்று முன்­தினம் டெல்லி வந்­த­டைந்தார். அவ­ருடன் பிரே­ஸிலின் மூத்த அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் குழுவும் வந்­துள்­ளது. பிரேஸில்  ஜனா­தி­ப­தி­யாக  பத­வி­யேற்ற பிறகு இந்­தி­யா­வுக்கு முதன்­மு­றை­யாக வந்­துள்ள ஜெய்ர் போல்­சோ­ன­ரோ­வுக்கு, சிறப்பு வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வுக்கு நான்கு நாட்கள் பய­ண­மாக வந்­துள்ள அவர், பிர­தமர் மோடி, இந்­திய ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்கள் உள்­ளிட்ட பலரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். 

இந்த சந்­திப்பின் போது, இந்­தியா -– பிரேஸில் இடை­யே­யான உறவை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பாக விவா­திக்­கப்­படும் எனவும், முக்­கி­ய­மான சில ஒப்­பந்­தங்கள் கையெ­ழுத்­தாகும் எனவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த குடி­ய­ரசு தின விழாவை முன்­னிட்டு  தலை­நகர் டெல்­லியில் முப்­படை அணி­வகுப்பு, பல்­வேறு மாநி­லங்­களின் கலை மற்றும் கலா­சா­ரத்தை எடுத்­து­ரைக்கும் அலங்­கார ஊர்­தி­களின் அணி­வ­குப்பு ஆகி­யவை இடம்­பெறும்.