மட்டக்களப்பு—காத்தான்குடி பிரதேசத்தில் 17170 மில்லி கிறாம் கஞ்சாவை வைத்திருந்த ஐவர் பொலிசாhரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரும் அடங்குவதாக காத்தான்குடி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கஞ்சாவுடன் ஐவரும் பிடி ஆணை  பிறப்பிக்கப்பட்ட ஆறுபேரும் மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவருமாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.