கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கொரோனா வைரஸால் 25 ஆம் திகதி வரை சீனாவில் 1975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 56 பேர் உயிரிழந்துள்ளதாக சி.சி.டி.வி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸானது கடந்த ஆண்டின் பிற் பகுதியில் சீனாவுன் வுஹானில் உள்ள சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த, சந்தையொன்றில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இந்த வைரஸ் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட சீனவின் நகரங்களில், ஹொங்கொங்கில் 5 பேரும், தாய்லாந்தில் 5 பேரும், அவுஸ்திரேலியாவில் 4 பேரும், மலேசியாவில் 4 பேரும், சிங்கப்பூரில் 4 பேரும், பிரான்ஸில் 3 பேரும், ஜப்பானில் 3 பேரும், தென்கொரியாவில் 3 பேரும், தாய்வானில் 3 பேரும், மாகோவுல் 2 பேரும், அமெரிக்காவில் 2 பேரும், வியட்நாமல் 2 பேரும் மற்றும் நேபாலில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவ‍ேளை கனடாவின் டொராண்டோவில் கொரோன வைரஸால் 50 வயதுடைய நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ சுகாதார அதிகாரிகள் அறிவிறுத்தியுள்ளனர். எனினும் இது உறுதிப்படுத்தப்பட்டால் கனடாவில் கொரோன வைரஸ் பரவிய முதல் நிகழ்வாக இது கருதப்படும்.

தற்போது குறித்த நபர் டொராண்டோவின் சன்னிபுரூக் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் கொரோன வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் 15 நகரங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த 15 நகரிங்களிலும் மொத்தம் 57.2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இவ் வைரஸ் குறித்து முன்னதாகவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் வைத்திய ஆய்வு நிறுவனமானது, இவ் வைரஸ் காரணமாக 18 மாதங்களில் 65 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இவ் வைரஸ் பரவுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த இந்த ஆய்வு நிறுவனம் இவ்வாறான வைரஸ் பரவுவள்ளதாக எச்செரிக்கை விடுத்திருந்தது. எனவே இந்த நிறுவனத்தின் இந்த தகவல் உலகலாவிய ரீதியில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.