சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்களின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதியே இந்த விபத்து நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 75 வயதுடைய மோட்டார் சைக்களின் சாரதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கெப் வாகனத்தின் சாரதியை கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.