சீனாவின் கொரோனா வசதிகள் தாக்கம் அதிகரித்து வருவதனை கருத்திற் கொண்டு 1000 நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய திறன் கொண்ட வைத்தியசாலையை 10 நாட்களுக்குள் நிர்மாணித்து முடிக்கும் பணிகள் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் மாநிலத்திலேயே குறித்த வைத்தியசாலையில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

25,000 சதுர மீட்டரில் 1,300 படுக்கை வசதிகளை கொண்ட இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு குறுகிய காலப் பகுதியில் பிரமாண்டமான வைத்தியாசலையொன்றை கட்டி முடிப்பது சாத்திமற்ற ஒரு விடயமாக கணப்பட்டாலும், இதற்கு முன்னரும் சீனா குறுகிய காலப் பகுதியில் வைத்தியசாலையொன்றை நிர்மாணித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் சார்ஸ் வைரஸ் பரவ ஆரம்பித்த வேளையில் பீஜிங்கில் 'Xiaotangshan' வைத்தியசாலை ஒரு வாரத்தில் கடடி முடிக்கப்பட்டு உலக நாடுகளில் பாராட்டினை பெற்றது.

சார்ஸ் வைரஸால் சீனாவில் 349 பேரும் ஹொங்கொங்கில் 299 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்கத்கது.