(ஆர்.விதுஷா)

மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக கடந்த வருடத்தில்  மாத்திரம் 80 ஆயிரத்து 998 பேர் தொழில் நிமித்தம் சென்றுள்ளதாக   வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

அந்த வகையில் சுமார் 40 வீதமான பெண்கள் வெளிநாடுளுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளமை தரவுகளின் ஊடாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் பொது  முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜெகத் படுகெதர  தெரிவித்தார்.  

அத்துடன்,அந்த வருடத்தில் ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 143 பேர்  வரையில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள  நிலையில், மொத்தமாக 2 இலட்சம் 3ஆயிரத்;து 141 பேர் வரையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு  சென்றுள்ளனர்.  

அவர்களில் அதிகமான பெண்கள் குவைத் நாட்டிற்கு   தொழில்நிமித்தம் சென்றுள்ளதுடன், அவ்வாறாக 30 ஆயிரத்து 31  பேர் வரையில் குவைத்திற்கு சென்றுள்ளனர்.

அதேபோல் அதிகளவிலான ஆண்கள் கட்டார் நாட்டிற்கு சென்றுள்ளதுடன், 36 ஆயரத்து 161 பேரே இவ்வாறு கட்டாரிற்கு  வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.    

கடந்த வருடத்தில்  9ஆயிரத்து 41 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் 62 ஆயிரத்து 687 பேர் வெளிநாடு சென்றுள்ளனர். 

அத்துடன் ,முழுமையாக பயிற்சி பெறாத 9ஆயிரத்து 478 பேர்  தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.

அவர்களில் ,எழுத்து வினைஞர் தொழிலுடன் தொடர்புடைய தொழில்களுக்காக 9ஆயிரத்து 155 பேரும் ,பணிப்பெண்களாக  61  ஆயிரத்து 603 பேரும் பயிற்சி பெறாத தொழிலாளர்களாக  51 ஆயிரத்து 177 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

 அதேவேளை  , 2018 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 11ஆயிரத்து 229 தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன், அதில் , 81ஆயிரத்து 511ஆயிரம் பெண்களும் 1 இலட்சத்து 29ஆயிரத்து 718 ஆண்களும்  உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் ,கடந்த வருடம் வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் தொடர்பில் 3 ஆயிரத்து 494 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றுள் 2 ஆயிரத்து 616 முறைப்பாடுகளுக்கு  தீர்வும்  பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.