(செ.தேன்மொழி)

சுதந்திரத்தின நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு படையினரின் ஒத்திகைகள் நாளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் , பெப்ரவரி மாதம் 2 , 3 ஆம் திகதிகளிலும் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன.

  

இதன்தனால் குறித்த தினங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை வீதி மூடப்படுவதுடன்,வாகன போக்குவரத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும் பிரதேச வாசிகளுக்கு மாத்திரம் வீதியை பயன்படுத்தும் வகையில் வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிலாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டஸ் நுழைவாயில் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் நூலக சந்தியிலிருந்து கிலாஸ் அவுஸ் மற்றும் ஆனந்த குமாரசாமி மாவத்தை நுழைவாயில் பகுதியிலும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தர்மபால மாவத்தையிலிருந்து , எப் .ஆர் சேனாநாயக்க மாவத்தை மற்றும் சொய்சா சுற்று வட்டத்திலிருந்து , ஸ்ரீ கன்னங்கரா மாவத்தை நுழைவாயில் பகுதியிலும் வாகனபோக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் ,எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தையிலிருந்து ஸ்ரீ கன்னங்கரா மாவத்தை ஊடான போக்குவரத்தும் விஜேராம மாவத்தை , ரோஸ்மீட் பிரதேசத்தின் ஊடாக ஸ்ரீ கன்னங்கரா மாவத்தை வரையான பகுதியும் விஜேராம மாவத்தை பென்ஸ் பகுதியினூடாக ஸ்ரீ கன்னங்கரா மாவத்தையுடனா பகுதிக்கும் ஹோட்டன் பிளேஸ் விஜேராம சந்தி , ஹோர்டன் மெட்லன்ட் கிரேசன்ட் சந்தி ஊடான போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

விஜேராம மாவத்தை தொடக்கம் ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தை ஊடாக ஹோர்டன் பிளேஸ்  மெட்லன்ட் கிரேசன்ட் சந்தி ஊடான போக்குவரத்தும், ஹோட்டன் பிலேசிலிருந்து மெட்லன்ட் கிரேசன்ட் சந்தி , ஹோட்டன் சுற்றுவட்டம் ஊடான பகுதியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் , ஆர்.பி. சேனாநாயக்க மாவத்தை மெட்லன்ட் கிரேசன்ட் சந்தி ஊடான போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வித்தியா மாவத்தை ,மெட்லன்ட் பிளேஸ் , பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (ஆர்.எப்.டி.சந்தி) மெட்லன்ட் பிளேஸ் வரையிலும் , பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (டொரின்டன் சந்தி) பிரோகீரத்தி அல்விஸ் மாவத்தை வரையான போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

இதேவேளை பிரோகீரத்தி அல்விஸ் மாவத்தை ஊடாக சுதந்திர மாவத்தைக்கு உள்நுழையும் வீதி மற்றும் ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை, மன்றக்கல்லூரி வீதியை அண்மித்த சுதந்திரச் சதுர்கத்திற்கு உள்நுழையும் வீதியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் ,  இலங்கை மன்றக்கல்லூரி வீதியிலிருந்து சுதந்திர மாவத்தை ஊடான பாதை மற்றும் சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர மாவத்தை , நந்தா மோட்டார் ஊடாக மெட்லன்ட் கிரேசன்ட் சந்தி வரையான வீதியின் போக்குவரத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி வீதியினூடாக கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரும் வாகனங்கள் லிபர்ட்டி சுற்று வட்டம் , தர்மபால மாவத்தை , பித்தல சந்தி , செஞ்சிலுவை சந்தி , லிப்டன் சுற்றுவட்டம் ஊடாகவும் எவலொக் வீதியையும் , தும்முல்ல பகுதியினூடாக வரும் வாகனங்கள் தர்ஸ்டன் வீதி , மல்வீதி (அர்னஸ்ட் தி சில்வா மாவத்தை) மல்பார சந்தி , பித்தல சந்தியினூடான வீதியையும் பயன்படுத்த முடியும்.

இதேவேளை ஹோர்டன் பிளேசினூடாக வரும் வாகனங்கள் ஹோர்டன் பிளேஸ், விஜேராம மாவத்தையின் தெற்குநோக்கி திரும்பி வோல்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம் ஊடாக செல்ல முடியும் என்பதுடன், தும்முல்ல பகுதிக்கு செல்வதற்கு பௌத்தாலோக்க மாவத்தையை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிகளுக்கு பதிலாக  சொய்சா சுற்றுவட்டத்திலிருந்து, வோல்ட் பிளேஸ் ஊடாகவும், வோல்டன் பிளேசிலிருந்து விஜேராம வீதியின் ஊடான மாற்று வழிகளை பயன்படுத்தி பொரளைக்கு  செல்ல முடியும்.

பௌத்தா லோக்க மாவத்தை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் விஜேராம மாவத்தை,ஹோர்டன் பிளேஸ் ,டீ.எஸ்.சேநானாயக்க  சந்தியின்  ஊடான வீதிகளை பயன்படுத்தி வெளியேற முடியும். அதேவேளை எவலொக் வீதியினூடாக வெளியேறும் வாகனங்கள், தர்மபால மாவத்தை, நூலக சந்தி,மல்வீதி சந்தி (அர்னஸ்ட் தி சில்வா மாவத்தை) ஜே.ஓ.சீ.சந்தி இராஜகிரிய மாவத்தையிலிருந்து ரீட் மாவத்தை ( பிலிப் குணவர்தன மாவத்தை ), தும்முல்ல சுற்றுவட்டத்தின் ஊடாக வெளியேற முடியும்.

காலி வீதியினூடாக வெளியேறும் வாகனங்கள் தர்மபால மாவத்தை , நூலக சந்தி, மல்வீதி சந்தி,ஆனந்த குமாரசாமி மாவத்தை, லிபர்டி சுற்றுவட்டம் , ஆர்.ஏ.த.மெல்மாவத்தை ஊடாக  வெளியேற கூடியதாக இருப்பதுடன் , இவ்வாறு வீதிகள் மூடப்பட்டுள்ள பகுதிகளைச் சேரந்த மக்கள் , அப்பகுதிகளில் உள்ள நிறுவனங்களின்  உரிமையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது அடையாளத்தை  உறுதிப்படுத்தியதன்  பின்னர் செல்வதற்கு அனுமதிவழங்கப்படும்.

அதேவேளை போக்குவரத்து  மட்டுப்படுத்தப்பட்டுள்ள  வீதிகளின் ஊடாக வரும் வாகனங்களின் சாரதிகளை மாற்றுவழியை நோக்கி  திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு நகரத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் , சுதந்திர சதுக்கத்தின் அண்மையிலான வீதியை பயன்படுத்தாமல் தொலைவில் இருக்கும் வீதிகளை பயன்படுத்துவதால் போக்குவரத்தை இலகுவாக்கி கொள்ள முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.