வெள்ளவத்தை - ருத்ரா மாவத்தையில் இரண்டு மாடி கட்டிடத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கல்கிஸ்ஸ நகரசபை தீயணைப்பு படையினரும் , பிரதேசவாசிகளும் இணைந்து  தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டனர். எனினும் குறித்த வீட்டிலிருந்த 79 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீப்பரவலின் போது உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மகள் , மருமகன் பேரப்பிள்ளை ஆகியோரும் வீட்டில் இருந்துள்ளதுடன் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.