Published by R. Kalaichelvan on 2020-01-25 18:12:27
கடந்த ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆஜராகியிருந்த நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின் அங்கிருந்து வெளியாகியுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.