தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின்  சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று  25.01.2020 மதியம் இடம்பெற்றது.

கொட்டகலை சுகாதார பணிமனை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, கொத்மலை நவதிஸ்பனை சுகாதார பணிமனையின் டெங்கு ஒழிப்பு பிரிவினர் என்பன இணைந்து, மேற்படி பாடசாலையில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, இராசாயண புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பாடசாலையில் டெங்குவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கோடு, இந்தப் புகை விசிறல் மற்றும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, கொட்டகலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சௌந்தராகவன் தெரிவித்தார்.