ஜனாதிபதி  கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

இது, இலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையமாகும்.

களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை இராணுவத்தினர் குறித்த தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலைய திட்டத்தின் பங்காளிகளாவர்.