நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று பெற்றோலிய அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

இந் நிலையத்தின் மூன்றாவது கட்ட பணிகள், கெரவலபிட்டி எல்.என்.ஜி மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)