சீனாவில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சர்வதேச ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இன்று மதியம் வரையிலான காலப்பகுதியில் 13 நாடுகளில் குறித்த வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.

அதேவேளை நேற்றைய ஆய்வின் முடிவில் 1,287 வழக்குகள் இது குறித்து பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளான நாடுகளின் வரிசை பின்வருமாறு,

ஹொங்கொங் : 5 பேர் பாதிப்பு

தாய்லாந்து: 5 பேர் பாதிப்பு

அவுஸ்திரேலியா : 4 பேர் பாதிப்பு 

பிரான்ஸ்: 3 பேர்  பாதிப்பு

ஜப்பான்: 3 பேர் பாதிப்பு 

மலேசியா: 3 பேர் பாதிப்பு 

சிங்கப்பூர்: 3 பேர் பாதிப்பு 

தாய்வான்: 3 பேர் பாதிப்பு 

மெக்கோ : 2 பேர் பாதிப்பு 

தென் கொரியா: 2 பேர் பாதிப்பு

அமெரிக்கா: 2 பாதிப்பு பாதிப்பு

வியட்நாம்: 2 பாதிப்பு

நேபாளம்: ஒருவர் பாதிப்பு 

இந்நிலையில் சர்வதேச நாடுகள் தீவிர விழிப்புணர்வு நடவடிகைகளில் ஈடுபட்டு வருவதோடு , இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கதில் பாதிப்படைந்து சிகிச்சைகள் பலனின்றி 41 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.