நிர்பாய விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் குமாருக்கு மெதுவாக கொல்லும் விசம் ஏற்றப்பட்டுள்ளது என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வினய் குமாரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

வினய் குமாருக்கு  மெதுவாக கொல்லும் விசம் ஏற்றப்பட்டுள்ளது .இதன்  காரணமாக அவர் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,என தெரிவித்துள்ள சட்டத்தரணி அதிகாரிகள் மருத்துவ அறிக்கையை வழங்க மறுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

வினய் எழுதிய 160பக்க நாட்குறிப்பை அதிகாரிகள் வழங்கவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 22 ம் திகதி இந்த நாட்குறிப்பை கேட்டிருந்தேன் ஆனால் இன்னமும் அவர்கள் அதனை வழங்கவில்லை, அது சிறையிலேயே உள்ளது என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

கருணை மனு தொடர்பில் இந்த நாட்குறிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மெதுவாக கொல்லும் விசம் தொடர்பில் சிறைச்சாலையில் வினய்க்கு கிசிச்சைவழங்கப்பட்டதை நிருபிக்க முயல்கின்றோம்,அவரது கை முறிக்கப்பட்டது, அவரிற்கு விசம் கொடுக்கப்பட்டது,இது தொடர்பான ஆவணங்களை எங்களிடம் வழங்கவில்லை என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வினய் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் சரியாக உணவுஉண்பதில்லை,இவற்றையெல்லாம் ஜனாதிபதி கருத்தில் கொள்ளவேண்டும் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனினும் நீதிமன்றம் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளது.

குற்றவாளிகள் தங்களுடைய ஆவணங்கள் பொருட்களை திகார் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள்ஏற்கனவே பொருட்களை வழங்கிவிட்டார்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.