திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 14வது நினைவு தினம் இன்று சனிக்கிழமை (25.01.2020) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டு வரும் உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியருகே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் ஆகிய அமைப்புக்களும் இணைந்து 'படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்' என்னும் தொனிப்பொருளில் இந்த ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது.
இந்ந ஞாபகார்த்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்நிரன், தென் மாகாண சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டாளருமான ப்ரடி கமகே மற்றும் வடக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM