வவுனியா நொச்சிக்குளத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நெல்காயவைக்கும் தளம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நொச்சிகுளம் கமக்காரர் அமைப்பின் தலைவர் கு.இராசேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட வவுனியா பிரதி மகாணா விவசாயப்பணிப்பாளர்  சகிலா பானு தளத்தினை திறந்து வைத்தார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியான ஒரு மில்லியன் ரூபா செலவில் குறித்த நெல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  மாளிகை,நொச்சிக்குளம், அலைகல்லுபோட்டகுளம் பகுதிகளைச் சேர்ந்த 200 ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.