தமிழ் மக்களின் பாரம்பரிய வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் புதிய முகவரியைத் தேடித்தருகிறது

யாழ்ப்­பாண நுழை­வா­யி­லான நாவற்­கு­ழியில் இன்று திறந்துவைக்­கப்­படும் சிவ­பூமி யாழ்ப்­பாணம் அரும்­பொருள் காட்­சி­ய­கத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத்­த­மிழர் வர­லாற்றில் நிரந்­த­ர­மாக இடம்­பெ­றப்­போகும் புதிய அத்­தி­யா­யத்தின் தொடக்­க­மாகப் பார்க்­கிறேன்.  இவ்­வருங் காட்­சி­ய­கத்தின் மூலம் எம் சந்­த­தி­யி­னரால் வளர்க்­கப்­பட்டு எம்­மோடு வாழ்ந்து வரும் பாரம்­ப­ரிய மர­பு­ரிமைச் சொத்­துக்­களைச் சிறிதும் பிச­காமல் அடுத்து வரும் சந்­த­தி­யி­ன­ருக்கு கைய­ளிப்­ப­தற்கு வழி­யேற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

மூன்று தளங்­களில் அமைக்­கப்­பட்ட இவ்­வ­ரும்­பொருள்  காட்­சி­ய­கத்தில் வட­இ­லங்கை மக்­களின் பூர்­வீக வர­லாற்று அடை­யா­ளங்கள், மர­பு­ரிமைச் சின்­னங்கள், பயன்­பாட்­டி­லி­ருந்து மறைந்து போகும் பாரம்­ப­ரிய பாவனைப் பொருட்கள், தமிழ் மக்­களின் கடந்­த­கால வர­லாற்­றையும், பண்­பாட்­டையும்  வெளிச்சம் போட்­டுக்­காட்டும் புகைப்­ப­டங்கள், ஓவி­யங்கள் என்­பன காட்­சிப்­ப­டுத்­தப்­பட உள்­ளன. இவற்றைப் பார்­வை­யி­டு­வோ­ருக்கு  எமது சந்­த­தி­யினர்  எங்­கி­ருந்து வந்­தார்கள்; எங்கே போகின்­றார் கள்,  எங்கே போகவேண்டும் போன்ற கேள்­வி­க­ளுக்­கெல்லாம்  விடை­காண வழி­பி­றந்­ துள்­ளது. இந்த அருங்­காட்­சி­யகம் தமிழ் மக்­களின் விலை­ம­திக்­க­மு­டி­யாத சொத்து மட்­டு­மல்­லாமல் அதை தூர­நோக்­குடன் கடின உழைப்பால் உரு­வாக்கித்தந்த கலா­நிதி ஆறு.திரு­மு­ருகனும் தமிழ் மக்­களின் நம்­பிக்­கைக்­கு­ரிய சொத்­தாகும். 

தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய மர­பு­ரிமைச் சின்­னங்கள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு முழு­மை­யான அருங்­காட்­சி­யகம் வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் நீண்­ட­காலக் கன­வாகும். 1971 இல் யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பட்ட பெரு­வெள்­ளத்தால் கந்­த­ரோ­டையில் மண்­ணுக்குள் புதை­யுண்­டி­ருந்த  பல நூற்­றுக்­க­ணக்­கான தொல்­பொருட் சின்­னங்கள் வெளி­வந்­தன. 

அவற்றைப் பார்­வை­யிட்ட  அன்­றைய அரச அதிபர் போல் பீரிஸ் அநு­ரா­த­பு­ரத்­திற்கு அடுத்த புரா­தன நகரம் கந்­த­ரோடை எனக் குறிப்­பிட்டு இம்­ம­ர­பு­ரிமைச் சின்­னங்­களைப் பாது­காக்க தமிழர் ஒரு­வரைத் தொல்­லியல் ஆணை­யா­ள­ராக நிய­மிக்க வேண்டும் எனக் குறிப்­பிட்டார். 1940 ஆம் ஆண்­டுக்­கு­ரிய பிரித்­தா­னியர் கால ஆவ­ணத்தில் சாவ­கச்­சேரி பழைய நீதி­மன்­றத்தின் கீழ் புதை­யுண்­டி­ருந்த புரா­தன ஆல­யத்தின் அழி­பா­டுகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்திக் காட்­டி­யது. 

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணத்தை மைய­மாகக் கொண்­டெ­ழுந்த பத்­தி­ரி­கைகள், தமி­ழர்­களின் மர­பு­ரி­மைகள் கவ­னிப்­பா­ரின்றி அழி­வ­டைந்து வரு­கின்­றன. பணத்­திற்­காக அவை பிற இடங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்டு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன  என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து அவற்றைப் பாது­காக்க மக்கள் முன்­வர வேண்டும் என அறை­கூவல் விடுத்­தன.  இந்­நி­லையில் 1970 களில் பேரா­சி­ரியர் கா.இந்­தி­ர­பாலா, வி.சிவ­சாமி, ஆ.சிவ­னே­சச்­செல்வன் ஆகி­யோரின் முயற்­சியால் யாழ்ப்­பாணத் தொல்­லி­யற்­க­ழகம் என்ற அமைப்பு தோற்­று­விக்­கப்­பட்­டது. 

அவ்­வ­மைப்பில் ஆர்­வத்­துடன் இணைந்துகொண்ட ஆசி­ரி­யர்­க­ளான பொன்­னம்­பலம், திரு­வள்­ளுவர், நில­ அ­ள­வை­யாளர் சேயோன், பூந­கரி உதவி அர­சாங்க அதிபர் கிருஷ்­ண­மூர்த்தி, கலை­ஞானி, குரும்­ப­சிட்டி கன­க­ரட்ணம் போன்ற பெரி­ய­வர்கள் தமிழ் மக்­களின் மர­பு­ரிமைச் சின்­னங்­களைக் கண்­ட­றி­வ­திலும், பாது­காப்­ப­திலும் ஆர்­வத்­துடன் பணி­யாற்­றினர் அவர்­களின் கண்­டு­பி­டிப்­புக்­களை ஆதா­ர­மாகக் கொண்டு பல்­க­லைக்­க­ழக மட்­டத்­திலும் சில ஆய்­வுகள் வெளிவந்­துள்­ளன. ஆயினும் மர­பு­ரிமைச் சின்­னங்­களைச் சேக­ரித்த பலர் இன்று அம­ரத்­துவம் அடைந்து விட்ட நிலையில் அம்­ம­ர­பு­ரிமைச் சின்­னங்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்­பதை யாருமே அறிந்­தி­ருப்­ப­தாகத்   தெரி­ய­வில்லை. 2009 க்குப் பின்னர்  முன்­பொ­ரு­போதும் இல்­லாத அள­விற்கு வட­இ­லங்கை மர­பு­ரிமைச் சின்­னங்கள் தென்­னி­லங்­கைக்கும், பிற நாடு­க­ளுக்கும் கடத்­தப்­பட்டு வரு­கின்­றன. 

இதற்­காக 2010-–2011 காலப்­ப­கு­தியில் தென்­னி­லங்கை வர்த்­த­கர்கள் தனியார் வீடு­களை வாட­கைக்கு எடுத்து வீடு­வீ­டாகச் சென்று குறைந்த விலையில் மர­பு­ரிமைச் சின்­னங்­களைக் கொள்­வ­னவு செய்த சம்­ப­வங்­களும் உண்டு. அவ்­வாறு கொள்­வ­னவு செய்­யப்­பட்ட மர­பு­ரிமைச் சின்­னங்கள் இன்றும் அநு­ரா­த­புரம், பொல­ந­றுவை, கொழும்பு, கண்டி போன்ற இடங்­களில் உள்ள கடை­களில் வெளி­நாட்­ட­வ­ருக்கு உரிய விற்­பனைப் பொருட்­க­ளாக உள்ளன. கடந்த வாரத்தில் வடஇலங்­கையில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்கு கடத்­தப்­பட இருந்த இரு கோடி ரூபா பெறு­ம­தி­யான மர­பு­ரிமைச் சின்­னங்­களை சுங்கப் பிரி­வினர் கைப்­பற்­றி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­வந்­தன. இவ்­வாறு எமது இனத்தின் மூலவேர், இன, மத அடை­யா­ளங்கள், பாரம்­ப­ரிய பண்­பாட்டுச் சின்­னங்கள் எம்கண் முன்­னேயே கடத்­தப்­பட்டும், அழி­வ­டைந்தும் வரு­வதை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. இதற்­கெல்லாம் மர­பு­ரிமைச் சின்­னங்­களைப் பாது­காக்க வேண்டும் என்ற விழிப்­பு­ணர்வும், அவற்றைப் பாது­காத்து எதிர்­காலச் சந்­த­தி­யிடம் கைய­ளிப்­ப­தற்­கான அருங்­காட்­சி­ய­கங்கள் இல்­லா­தி­ருப்­ப­துமே முக்­கிய கார­ணங்­க­ளாகும். இவற்றைச் செய்து கொடுக்க அரச அமைப்­புக்­களோ, பொது நிறு­வ­னங்­களோ முன்­வ­ர­வில்லை. 

தென்­னி­லங்­கையைப் போல் இங்­குள்ள பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள் இவற் றைச் செய்­வதில் அதிக அக்­கறை காட்டி வரு­வ­தா­கவும் தெரி­ய­வில்லை. இதனால் இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த காலத்தில் இருந்து எமது மர­பு­ரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் மக்கள் மத்­தியில் ஒரு கன­வா­கவே இருந்து வந்­துள்­ளது. ஆயினும் தற்­போது அந்தக் கன­வுக்கு சிவன் அருள் கிடைத்துவிட்­டது. அது தனி மனி­த­னாக இருந்து அல்லும் பகலும் உழைத்த கலா­நிதி ஆறு.திரு­மு­ருகன் வடி­வத்தில் கைகூ­டி­யுள்­ளது. அதுவே நாவற்­கு­ழியில் தலை­நி­மிர்ந்து நிற்கும் சிவ­பூமி அரும்­பொருள் காட்­சி­ய­க­மாகும்.

அரும்­பொருள் காட்­சி­யகம் அமைக்­கப்­பட வேண்டும் என்­பது கலா­நிதி ஆறு.திரு­மு­ருகன் அவர்­களின் திடீர்கனவு அல்ல. அவர் துர்க்­கை­யம்மன் ஆலயத் தலை­வ­ராக பத­வி­யேற்ற காலத்தில் இருந்து எமது மர­பு­ரிமைச் சின்­னங்­களைச் சிறுகச் சிறுக சேமித்து வந்­ததை நான் அறிவேன். அவை வலி­கா­மத்தில் 3 இடங்­களில் பாது­காக்கப்­ பட்டு வந்­தன. ஆயினும் அதற்­கொரு அருங்­காட்­சி­யகம் தோன்றும் என  நான் கனவு காண­வில்லை. அதனால் அவற்றின் வர­லாற்றுப் பெறு­ம­தியை உணர்ந்து அம்­ம­ர­பு­ரிமைச் சின்­னங்­களை எமது தொல்­லியல் இறுதி வருட மாண­வி­யூ­டாக  ஆவ­ணப்­ப­டுத்தி வைத்­துள்ளோம். அது தனி­யொரு நூலா­கவும்  விரைவில் வெளி­வ­ர­வுள்­ளது. அப்­போது சிவ­பூமி அரும்­பொருள் காட்­சி­யகம் தோன்­றிய வர­லாற்றுப் பின்­ன­ணியும் தெரி­ய­வரும். 

இன்­றைய உலகில் நேரம், பணச் செலவு என்­ப­வற்றைக் கருத்தில் கொண்டு ஒரு நாட்டின் அல்­லது ஒரு இனத்தின் வர­லாற்­றையும், பண்­பாட்­டையும் அறிந்துகொள்­வ­தற்கு அங்­குள்ள அருங்­காட்­சி­ய­கங்­க­ளுக்குச் செல்­வ­தையே பெரிதும் விரும்­பு­கின்­றனர். தற்­போது தமிழ் மக்­களின் வர­லாற்­றையும், பண்­பாட்­டையும் அறிந்துகொள்­வ­தற்கு புதிய வழி திறக்­கப்­பட்­டுள்­ளது. பன்­னி­ரண்டு பரப்பில் மூன்று தளங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள சிவ­பூமி அரும்­பொருள் காட்­சி­ய­கத்தின் கட்­டிட அமைப்பு, காட்­சிப்­ப­டுத்­தலில் பின்­பற்­றப்­பட்­டுள்ள ஒழுங்­கு­முறை, காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு வரும்  வர­லாற்றுச் சின்­னங்கள், சிலைகள், சிற்­பங்கள், பாரம்­ப­ரிய பாவனைப் பொருட்கள், அவை பற்­றிய வர­லாற்றுக் குறிப்­புக்கள் என்­பன அருங்­காட்­சி­ய­கத்தைப் பார்க்க வரு­ப­வர்­க­ளுக்கு இது­வரை தெரிந்­தி­ருக்­காத தமிழர் பற்­றிய புதிய வர­லாற்றுச் செய்­தி­களை சொல்லப் போகின்­றன. 

அவற்றுள் திறந்­த­வெளி அருங்­காட்­சி­ய­கத்தில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தமிழ் மன்­னர்­களின் சிலைகள் பலரின் கவ­னத்தை ஈர்ப்­ப­தாக உள்­ளன. இது­வரை எல்­லாளன், சங்­கி­லியன், பண்­டா­ர­வன்­னியன் போன்ற தமிழ் மன்­னர்­க­ளுக்கே சிலை வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், யாழ்ப்­பா­ணத்தில் நல்­லூரைத் தலை­ந­க­ராகக் கொண்டு 350 ஆண்­டுகள் தொடர்ச்­சி­யாக ஆட்சி செய்த 21 தமிழ் மன்­னர்­க­ளுக்குச் சிலைகள் வைக்­கப்­ப­ட­வில்லை. அக்­கு­றை­பாட்டைப் போக் கும் வகையில் முதன் முறை­யாக  சிவ­பூமி திறந்­த­வெளி அருங்­காட்­சி­ய­கத்தில் 21 மன்­னர்­க­ளுக்கும்  கட­வு­ள­ருக்கு அடுத்த நிலையில் பீடங்கள் அமைத்து அவற்றின் மேல் மன்­னர்­களின் சிலைகள் வடி­வ­மைக்­கப்­பட்டு அவற்றின் கீழ் ஆட்­சி­யாண்­டுகள் பொறிக்­கப்­பட்­டுள்­ளமை வர­லாற்று ஆர்­வ­ல­கர்­க­ளுக்கு மன­ம­கிழ்வை அளிப்­ப­தாக உள்­ளது. 

கடந்த இரு­வா­ரங்­க­ளாக முக­நூல்­களில் பகி­ரப்­பட்ட செய்­தி­களில் சிவ­பூமி அருங்­காட்­சி­யகம் பற்­றிய செய்­தி­களே அதிக அளவில் ஆக்­கி­ர­மிப்புச்  செய்­தி­யாகக் காணப்­ப­டு­கின்­றன. இது தமிழ் மக்­களின் நீண்ட நாள் கனவு நிறை­வே­றி­யதன் பிர­தி­ப­லிப்­பாகும். இதன் சாத­னைக்கும் நன்­றிக்கும் உரி­யவர் அர­சியல் கலப்­பற்ற சொல்லின் செல்வர் ஆறு.திரு­மு­ருகன் அவர்கள். துடிப்­புள்ள இளை­ஞ­ராக ஆன்­மீகப் பணியில் ஈடு­பட்ட அவர் படிப்­ப­டி­யாக சமூகப் பணியில் அகலக் கால்பதித்து சாதனை படைத்து வரும் ஒருவர். பலர் சிந்திக்க முன்னரே செயலில் காட்டி பிறரைப் புதிதாகச் சிந்திக் கத் தூண்டியவர். 

இதற்கு தனிமனிதனாக இருந்து கிழக் கிலங்கை வரை இன்று வியாபித்துள்ள அனாதைச் சிறுவர்களுக்கான கல்விக்கூடம், விழிப்புணர்வற்றவர்களுக்கான காப்பகம், வயோதிபர் மடம், நாய்களுக்கான காப்பகம் முதலான அவரது பணிகள் கட்டியம் கூறி நிற்கின்றன. தூரநோக்குடன் நாவற்குழியில் அவர் உருவாக்கிய திவாசக அரண்மனை இலங்கை வரும் ஆன்மீகவாதிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் யாழ்ப்பாண த்தை திரும்பி பார்க்க வைத்தது. இன்று அதற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள சிவ பூமி அரும்பொருள் காட்சியகம் தமிழர் பண்பாட்டை மேலும் தலைநிமிரச் செய் துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தின் நுழை வாயில் நாவற்குழி என அடையாளப்படுத் தப்படும் பெயர் விரைவில் யாழ்ப்பாண இராசதானியின் நுழைவாயில் என அழைக் கப்படுவதற்கு இவ்வருங்காட்சியகம் வழி வகுக்கலாம்.

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தலைவர், 

வரலாற்றுத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்.

(படப்பிடிப்பு: ஐ.சிவசாந்தன்)