சீனவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தற்போத வரையில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவின் வுஹான் நகரில் இருந்து இங்கிலாந்துக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற 2,000 பேரை தேடும் பணியில் இங்கிலாந்து (DoH) சுகாதார பிரிவினர்  ஈடுபட்டுள்ளதோடு , அவர்களில் யாருக்காவது இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டிருந்தால் சிகிச்சை அளிப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக (DoH) சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஹீத்ரோ விமனாநிலையத்தில் தீவிர சோதனை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விமனாநிலைய சுகாதார பிரிவினர் விழிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு அதிகளவில் சுகாதார கண்கானிப்பாளர்களை சேவையில் ஈடுபத்தியுள்ளதாக (DoH) பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சீனாவில் இருந்து இங்கிலாந்திற்கு வந்த 14 பேர் மீது கொரோனா வைரஸிற்கான சோதனைகள் மேற்கொண்ட போது அவர்களுக்கு எவ்வித பிரச்சிணையும் இல்லையென சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீனாவில் இருந்து இங்கிலாந்திற்கு வந்த 2,000 பேரை கண்டறிந்து அவரிகளின் உடல் நிலை குறித்த சோதனை நடத்தவுள்ளதாக  (DoH) சுகாதார  திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.