(இரா­ஜ­துரை ஹஷான்) 

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை   பிர­த­ம­ராக    தெரிவு  செய்ய   ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்கள்  தற்­போது மேற்­கொள்ளும் முயற்­சிகள் அனைத்தும் வெறும் கன­வா­கவே அமையும். பொதுத்­தேர்­தலில்   அந்தக்   கட்­சியை  மக்கள் முழு­மை­யாக புறக்­க­ணிப்­பார்கள் என துறை­முக அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரி­வித்தார்.

 பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் தொடர்ந்து இணக்­க­மாக செயற்­பட முடி­யாது என்று   எதிர்த்தரப்­பினர் தற்­போது  தவ­றான அர­சியல் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். பிர­த­ம­ராக சஜித் பிரே­ம­தாஸ தெரிவு செய்­யப்­பட்டு ஜனா­தி­ப­தி­யுடன்   இணைந்து பல­மான அர­சாங்­கத்தை கொண்டு செல்­வ­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் குறிப்­பி­டு­வது நகைப்­புக்கு­ரி­யது. எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­த­ம­ராக நிய­மிக்க ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் முன்­னெ­டுக்கும் முயற்­சிகள் அனைத்தும்  வெறும் கன­வா­கவே  அமையும். ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்  கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை   புறக்­க­ணித்த மக்கள் பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும் முழு­மை­யாக   புறக்­க­ணிப்­பார்கள். ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் எவ்­வித  அதி­கார போட்டி தொடர்­பான முரண்­பா­டு­களும் தோற்றம்  பெற­வில்லை. 

இரு­வரும் ஒன்­றி­ணைந்தே  சிறந்த அரச நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­கின்­றார்கள். பிர­தமர்  பத­விக்கு மஹிந்த ராஜ­பக் ஷ பொருத்­த­மா­னவர் என்­பதை பெரும்­பான்மை மக்கள் ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள்.

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை யில்  அதி­கார  முரண்­பாட்டை தோற்­று வித்­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தம் முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். இதற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யான ஆதரவு அவ­சி­ய­மாகும். அரசியல் ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நிலையான பாராளுமன்றத்தை தோற்றுவிக்க வேண்டுமாயின் மக்கள்  பெரும்பான்மையான ஆதரவினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கவேண் டும் என்றார்.