இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் விடாமுயற்சியை குறிக்கும் புகைப்பட மற்றும் ஆவணப்படக் கண்காட்சி கொழும்பு பார்க் ஸ்ட்ரீட் மியுவ்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சி ஜுன் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. பொது மக்கள் பார்வைக்காக ஜுன் மாதம் 8 மற்றும் 9ஆம் திகதி திறந்திருந்தது.
இந்த அறிமுக நிகழ்வில் உள்ளக விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் கூட்டாண்மை தலைமை அதிகாரி லிபுசி சகுபோவா, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமை கூட்டாண்மை Charge d 'Affaire a.i., வில்லியம் வேர்பொயெஸ்ட், ஐரோப்பிய கமிஷனின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்குரூபவ் கிராமிய அபிவிருத்திக்கான நிகழ்ச்சி முகாமையாளர் லோரா குவால்டி, ஐக்கிய நாடுகள் வதிவிட ஒழுங்கிணைப்பாளர் a.i. அலெய்ன் சிபனேலர் மற்றும் IFC இன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் அமெனா ஆரிஃவ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் போது இலங்கை மக்கள், மாவட்ட அரசாங்க அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகள் மற்றும் உலக வங்கியின் அங்கத்துவ அமைப்பான IFC ஆகியவற்றுக்கிடையிலான பேணப்பட்டுவரும் உறுதியான பங்காண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஆகியன இந்த புகைப்பட மற்றும் ஆவணப் பட கண்காட்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி ஊடாக இந்த சமூகங்களின் வாழ்க்கைக்கு வழங்கப்படும் நிலைபேறான மற்றும் மாறுபடும் பங்களிப்புகள் வெளிக்காட்டப்பட்டிருந்தன.
ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் கூட்டாண்மை தலைமை அதிகாரி லிபுசி சகுபோவா கருத்து தெரிவிக்கையில்,
“இந்த கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களை லேகா எதிரிசிங்க படம் பிடித்திருந்ததுடன் திரையிடப்பட்டிருந்த ஏழு ஆவணப் படங்களை ரங்க ஜாகொட தயாரித்திருந்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் வலுச்சேர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாக இவை அமைந்துள்ளன. தமது எதிர்காலத்துக்கான பொறுப்பை ஏற்பதற்குரிய வலிமையை இந்த சமூகங்கள் கொண்டிருப்பதை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி முன்னெடுத்திருந்தது.” என்றார்.
இந்நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்த ஆவணப்படங்களில்
· பெண் தொழில் முயற்சியாளரான சீதா மெனிகே, சணச அபிவிருத்தி வங்கி மற்றும் IFC ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மை ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியாண்மை கடனை பெற்றுக் கொண்டார்.
· அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான விஜேசிறிக்கு வெண்காய விதைகள் உற்பத்தி தொடர்பில் விவசாய திணைக்களம் மற்றும் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
· மன்னாரைச் சேர்ந்த பெண்களுக்கு மினி ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நிறுவ சர்வதேச தொழில் ஸ்தாபனம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனம் ஆகியன இடையீடுகளை மேற்கொண்டுள்ளன.
· ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் உள்நாட்டு பங்காளரான OfERR உடன் இணைந்து பாடசாலைக்கு ஒழுங்கீனமாக வரும் பிள்ளைகளை மீளமைத்து பாடசாலைக்கு மீள வரவழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
· ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மூலமாக வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத்திறன் வாய்ந்த பெண்களுக்கு தமது திறனை மேம்படுத்தி தோற்பொருள் மற்றும் பனம்பொருள் உற்பத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் வாகரையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தலைமைத்துவத்துக்கு அவசியமான ஆளுமைகளை பெற்றுக் கொடுத்திருந்ததன் மூலமாக அரசாங்க அமைப்புகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பங்களிப்பை வழங்கியிருந்தமை மற்றும்
· காத்தான்குடி நகர சபைக்கு கழிவுகளை நிர்வகித்துக் கொள்ள உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளையும்ரூபவ் ஊழியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்து முகவர் அமைப்புகளான UNDP, UNICEF, UNOPS, FAO, ILO மற்றும் உலக வங்கியின் அங்கத்துவ அமைப்பான IFC ஆகியன இணைந்து முன்னெடுக்கும் EU-SDDP நிகழ்ச்சித்திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அமைந்துள்ள அபிவிருத்திக்கான ஒன்றிணைவுத் திட்டமாகும்.
60 மில்லியன் யூரோ நிதியுதவியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஏழு மாவட்டங்களில் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றன இதன் இலக்காக அமைந்துள்ளது. இதன் ஊடாக நாட்டில் சமூக பொருளாதார இடைவெளியை நிவர்த்தி செய்வது நோக்கமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, அம்பாறை, மொனராகலை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM