கொள்­கைத்­திட்ட மாற்­றங்கள் மக்­க­ளையே பாதிக்கும்...

Published By: J.G.Stephan

25 Jan, 2020 | 11:47 AM
image

கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மற்றும் மக்கள் நலன்­நோன்பு  திட்­டங்கள் என்­பன புதிய அர­சாங்­கத்­தினால் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அந்த வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களும்   நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. 

இதே­போன்றே கடந்த  அர­சாங்­கத்தின் இறு­திக்­கா­லத்தில்  வழங்­கப்­பட்ட வேலை­வாய்ப்­பு­களும்   இரத்து செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளுக்­கான பயிற்­சி­களும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.  அத்­துடன் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு, ஓய்­வூ­தியம் பெறு­ப­வர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு மற்றும் அரச நிறை­வேற்று   சேவை  அதி­கா­ரி­க­ளுக்­கான  கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு  என்­ப­னவும்  இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. 

அர­சாங்­கத்தின் இத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால்   பெரு­ம­ள­வான மக்கள் பாதிக்­கப்­படும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  ஒரு ­நாட்டில்  அர­சாங்­கங்கள்  மாறி­னாலும் அர­சாங்­கத்தின் கொள்­கைகள்  மாறக் ­கூ­டாது.  அபி­வி­ருத்தி அடைந்த  மேற்­கு­ல­க ­நா­டு­களில்  இத்­த­கைய கொள்­கை­களே  கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இலங்கை போன்ற  வளர்­முக நாடு­களில்   அர­சாங்­கங்கள் மாறு­கின்­ற­போது  அதன் கொள்­கை­களும் மாறு­கின்ற நிலைமை   காணப்­பட்டு வரு­கின்­றது.   அதன் கார­ண­மா­கவே தற்­போதும்  இத்­த­கைய இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  

கடந்த  நல்­லாட்சி அர­சாங்க காலத்தில்  நாட்டின்  அபி­வி­ருத்­தி­களைக் கருத்தில் கொண்டு  பிர­தேச செய­லக மட்­டங்­களில் பல்­வேறு செயற்­றிட்­டங்கள்   உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன. ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான  இந்த ஆட்­சியில்  பிர­தேச  செய­லக மட்­டத்­தி­லான அபி­வி­ருத்­தி­களைக் கருத்தில் கொண்டு கம்­பெ­ர­லிய திட்டம்   நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.  இதே­போன்று  சிறிய  உற்­பத்­தி­யா­ளர்கள், முத­லீட்­டா­ளர்­களை ஊக்­கு­விக்கும் வகையில் என்டர்பிரைஸஸ்  சிறி­லங்கா திட்டம்  முன்­னெ­டுக்­கப்­பட்­டது.  நிதி அமைச்­ச­ராக மங்­கள சம­ர­வீர பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து   ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்­தினால் இத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 

 இதன்­மூலம்  வடக்கு,கிழக்­கிலும்   பல்­வேறு  அபி­வி­ருத்தித் திட்­டங்கள்,  உட்­கட்­ட­மைப்புப் பணிகள்   மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  மாவட்­டங்கள் தோறும்  பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் ஊடாக   இந்தத்  திட்டம்   நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. மாவட்ட அபி­வி­ருத்தி இணைப்­புக்­குழு கூட்­டங்­களில்  அனு­மதி பெற்று இந்த  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.  பெரு­ம­ளவு நிதி கம்­பெ­ர­லிய திட்­டத்தின் மூலம் பிர­தேச  செய­லக மட்ட  அபி­வி­ருத்­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

 இதே­போன்று என்டர்பிரைஸஸ் சிறி­லங்கா  திட்­டத்தின் மூலமும்   இலகு கடன் கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­பட்­ட­துடன்  நிதி ஒதுக்­கீ­டு­களும்  முன்­னெ­டுக்­கப்­பட்டு   பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 

 புதிய  இடைக்­கால  அர­சாங்கம்  பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. கம்­பெ­ர­லிய திட்­டத்தின் மூலம் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு இடை­ந­டுவில் உள்­ளன. அதனை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை   காணப்­ப­டு­கின்­றது.  வேலைத்­திட்­டங்கள் முடி­வ­டைந்­துள்ள போதிலும் அதற்­கான கொடுப்­ப­னவு தொகை­ையப் பெற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால் பெரு­ம­ள­வான ஒப்­பந்­தக்­கா­ரர்கள் வேலைத்­திட்­டங்­களை முடித்­து­விட்டு  கொடுப்­ப­னவை பெற முடி­யாது திண்­டாடி வரு­கின்­றனர். 

இந்தத் திட்­டங்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்ட நிதி   வழங்­கப்­ப­டா­மை­யால்  கொடுப்­ப­னவு  விட­யத்தில்  பெரும் இழு­பறி நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி இன்­மை­யால்  பல திட்­டங்கள் இன்­னமும் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. 

இதே­போன்று என்டர்பிரைஸஸ் சிறி­லங்கா திட்­டமும் இடை­ந­டுவில் கைவி­டப்­பட்­டுள்­ள­மை­யால் அதன் மூலம் பயன் ­பெற காத்­தி­ருந்த பய­னா­ளி­களும்   பெரும்­ பா­திப்­பு­களைச்  சந்­தித்­துள்­ளனர். 

நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் பல்­வேறு   வேலை­வாய்ப்­பு­களும்   வழங்­கப்­பட்­டன.   ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு சில மாதங்­க­ளுக்கு முன்னர்  8000 பேருக்கு  புதிய நிம­னங்­களும்  வழங்­கப்­பட்­டி­ருந்­தன.  அன்­றைய  பிரதமர் கீழான அமைச்சின் கீழ்  செயற்­றிட்ட உத­வி­யாளர்  பத­விக்கு நிய­ம­னங்கள்   வழங்­கப்­பட்­டி­ருந்­தன.  

இதே­போன்று  இரண்­டாந்­தர  மொழிப் பயிற்சி ஆசி­ரி­யர்­க­ளாக 1500 பேர் வரையில்  நிய­மனம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவர்­க­ளுக்கு பயிற்­சியும் வழங்­கப்­பட்டு வந்த நிலையில்   தற்­போது   இத்­த­கைய  நிய­ம­னங்கள் அனைத்தும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­ன்ற­ன.  இதனால்  பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளுடன்   நிய­ம­னங்­களைப் பெற்ற இளைஞர், யுவ­திகள் பெரும் ஏமாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றனர்.  அர­சாங்கம்  தமது நிய­ம­னங்­களை  வழங்­குமா? அல்­லது முழு­மை­யாக  இரத்து செய்­து­வி­டுமா  என்று பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஏங்கி வரு­கின்­றனர். 

கடந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்தில்   அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு,  ஓய்­வூ­தியம் பெறு­ப­வர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு மற்றும்  அரச நிறை­வேற்று  சேவை அதி­கா­ரி­க­ளுக்­கான கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு என்­ப­ன­வற்றை    ஜன­வரி மாதம்  மேற்­கொள்­வ­தற்கு   திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.  இதற்­கான சுற்று நிரு­பமும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. 

ஆனால்  தற்­போது நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டா­மை­யால்  இந்தக்  கொடுப்­ப­ன­வையும் இடை­நி­றுத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. 

 கடந்த  2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு கால­கட்­டத்தில் முன்­னைய அர­சாங்கம் அரச  ஊழி­யர்­க­ளுக்கு  வழங்­கிய சம்­பள அதி­க­ரிப்­புக்­கி­ணங்க   அர­சாங்க ஊழி­யர்­களில் ஒரு­ ப­கு­தி­யி­னரின் சம்­பளம்  மற்றும்  ஓய்­வூ­தியம் பெறு­வோ­ரது கொடுப்­ப­ன­வு­களில்  முரண்­பாடு  ஏற்­பட்­டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த அர­சாங்கம்  2019 ஜன­வரி மாதம் முதல்  அர­சாங்க  ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு, ஓய்­வூ­தி­யர்­க­ளுக்­கான  கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு  மற்றும்  அரச நிறை­வேற்று சேவை அதி­கா­ரி­க­ளுக்­கான கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்றை வழங்கத் தீர்­மா­னித்­தி­ருந்­தது.   அது தொடர்பில் ஏற்­க­னவே சுற்­று­நி­ருபம்  வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.   அதற்­கி­ணங்க  தற்­போ­தைய அர­சாங்கம்  2019 டிசம்பர்  10 ஆம் திகதி  இந்த விடயம் தொடர்பில்   அமைச்­ச­ரவைத் தீர்­மானம் எடுத்­தி­ருந்­தது.  எனினும்   அதற்­கான நிதி  ஒதுக்­கீடு செய்­யப்­ப­டா­ததால்  இம்­மாதம்  20 ஆம் திகதி கூடிய அமைச்­ச­ரவை   குறித்த சம்­பள அதி­க­ரிப்பு  மற்றும் கொடுப்­ப­ன­வு­களை  இடை­நி­றுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. இத­னா­லேயே  இந்த விட­யத்தில்  இழு­பறி  நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

இவ்­வாறு  கடந்த அர­சாங்­கத்­தினால்  முன்­னெ­டுக்­கப்­பட்ட   அபி­வி­ருத்தித் திட்­டங்கள், ஊழி­யர்­களின் நலன்­நோன்பு திட்­டங்கள்  என்­ப­வற்றை  தற்­போ­தைய அர­சாங்கம்  இடை­நி­றுத்­தி­யுள்­ள­மை­யால்  பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்ள மக்கள்,  அதற்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து  வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

கம்­பெ­ர­லிய திட்­டத்தின் கீழ்  மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டமை தொடர்­பிலும் கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­ப­டாமை குறித்தும்   எதிர்க் ­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்தி வரு­கின்­ற னர். இந்த விடயம் தொடர்பில்   தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் அண்­மையில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம்   கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இதன்­போது   நிதிப்­ பி­ரச்­சினை தற்­போது காணப்­ப­டு­வ­தா­கவும் அதனை  நிவர்த்தி செய்­ததும்   இந்தத் திட்­டங்­க­ளுக்­கான கொடுப்­ப­னவை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் பிர­தமர்  தெரி­வித்­துள் ளார்.

இதே­போன்றே  ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜப­க் ஷ­வை  நேற்று முன்­தினம்   பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தலை­மையில்  ஆயர்கள் சந்­தித்துப் பேசி­யுள்­ளனர்.  இந்தச் சந்­திப்­பின்­போது முன்­னைய  அர­சாங்க காலத்தில்  மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தி திட்­டங்கள்  தற்­போது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில்  யாழ். மறைமாவட்ட ஆயர்  ஜஸ்டின் ஞானப்பிரகாசம்   ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதுடன்  இந்தத் திட்டங்களை  தொடர வேண்டியதன்  அவசியத்தையும்   வலியுறுத்தியுள்ளார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி   கோத்தபாய ராஜப­க் ஷ,­   அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க  செயற்றிட்டங்களை வகுத்துள்ளதாகவும் அதற்கிணங்க  அவற்றை முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  உறுதி வழங்கியிருக்கின்றார். 

உண்மையிலேயே  எந்த அரசாங்கமாக இருந்தாலும் அந்தந்த அரசாங்க காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்நோன்பு வேலைத்திட்டங்கள்  அடுத்த ஆட்சி மாறியபோதிலும்  முன்னெடுக்கப்பட வேண்டியது   அவசியமானதாகும்.  அவ்வாறு   அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால்தான் நாட்டை  முன்னேற்ற முடியும். இதனைவிடுத்து ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் பழைய திட்டங்கள் கைவிடப்படுமானால் அதன் மூலம் நாட்டுக்கே பாதகம் ஏற்படும். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜனாதிபதியும்  இடைக்கால அரசாங்கத் தரப்பினரும் செயற்பட வேண்டுமென  வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04