தமிழ் கூட்­ட­மைப்­புடன் மட்டும் பேச­ மு­டி­யாது: அனைத்து தரப்­பு­டனும் பேசுவோம்; அர­சாங்கம் கூறு­கி­றது

By J.G.Stephan

25 Jan, 2020 | 10:39 AM
image

(ரொபட் அன்­டனி)

தமி­ழர்­க­ளி­னதும் கூட்­ட­மைப்­பி­னதும் பிரச்­சி­னைகள் வேறு­பட்­டவை

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமிழ்  மக்­களின் ஏகப் பிர­தி­நி­திக­ளாக ஏற்று அவர்­க­ளுடன் மட்டும் பேச்சு நடத்­த ­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் இல்லை.  மாறாக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது என்று அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

தமிழ்  மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கும் இடையில் பாரிய வேறு­பா­டு­களை காண்­கின்றோம்.  இந்த இடத்தில்    அர­சாங்­க­மா­னது தமிழ்  மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்கும் என்றும் அர­சாங்­கத்தின் பேச்­சாளர் குறிப்­பிட்டார்.  

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன்  அர­சாங்கம் நேர­டி­யாக  பேச்­சு­வார்த்தை நடத்­துமா என்­பது   தொடர்­பான கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே  அவர் இதனை குறிப்­பிட்டார். 

இந்த விடயம் குறித்து அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய மேலும் குறிப்­பி­டு­கையில் 

வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள்  தொடர்­பான அப்­ப­கு­தியில் உள்ள அனைத்து கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  தலை­மை­யி­லான  அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது.  

ஆனால்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமிழ்  மக்­களின் ஏக பிர­தி­நி­தி­யாக ஏற்று அவர்­க­ளுடன் மட்டும் பேச்சு நடத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் இல்லை.  

அது­மட்­டு­மன்றி தமிழ் மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்றை தீர்க்­க­வேண்டும். ஆனால் தமிழ்  மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கும் இடையில் பாரிய வேறு­பா­டு­களை காண்­கின்றோம்.  

இந்த இடத்தில்    அர­சாங்­க­மா­னது தமிழ்  மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்கும். மாறாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரச்­சி­னை­க­ளுக்கு  அர­சாங்கம் முக்­கி­யத்­துவம் அளிக்­காது என்­ப­தனை தெ ளிவாக குறிப்­பி­டு­கின்றோம்.  

இந்த அடிப்­ப­டையில் வடக்கு கிழக்கில்  அனைத்து கட்­சி­க­ளு­டனும்  தமிழ்  மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பேச  அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது. ஆனால் முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில் இந்த இடத்தில்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை  தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக ஏற்­றுக்­கொள்ள அர­சாங்கம்  தயா­ரில்லை என்­ப­தாகும். 

வடக்கு கிழக்கு மக்­க­ளுடன் பேச்சு நடத்­த­வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு இருக்­கின்­றது. அதற்­காக நாங்கள் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். ஆனால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை  தாங்கள் தான் தீர்க்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தமிழ்க் கூட்­ட­மைப்பு இருக்­கின்­றது. வேறு எவ­ரையும்  அதற்கு அனுமதிப்பதில்லை என்று அக்கட்சி கருதுகின்றது.. 

அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை.  கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல் வித்தியாசமானதாக இருக்கின்றது. எமது  அரசாங்கத்தைப் பொறுத்தவரை  தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்  என்பதே பிரதான நோக்கமாக உள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right