நடுவரின் தீர்ப்புக்கு எதிராக ஆதங்கத்தை வெளிப்படுத்திய சங்கா

Published By: Priyatharshan

10 Jun, 2016 | 03:25 PM
image

கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லோட்ஸில் இடம்பெற்று வருகின்றது.

நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது. 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழப்பிற்காக இலங்கை அணியினரால் ஆட்டமிழப்பு கோரப்பட்டது.

இதையடுத்து ஆடுகளத்திலிருந்த நடுவர்கள் அதனை மறுக்க இலங்கை அணியினால் மீள் பரிசோதனைக்கு கோரப்பட்டது. இதையடுத்து மீள் பரிசோதனையின் போதும் ஆட்மிழப்பு வழங்கப்படவில்லை. 

குறித்த ஆட்டமிழப்பு மயிரிழையில் துடுப்பாட்ட வீரருக்கு சாதகமானதால்  ஜெனி பேர்ஸ்டோவ் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியை ஸ்திர நிலைக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து குமார் சங்கக்கார தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

மீள்பரிசீலனை முறையில் ஆட்டமிழப்பென்பது சரியாக புலப்படுகின்றபோதிலும் நடுவர்கள் பிழையான தீர்ப்பை வழங்கியதால் அத் தீர்ப்பு வீணாகிப்நாபோயுள்ளது. ஆட்டமிழப்பு மீள்பரிசீலனை முறையில் தெரியவேண்டும். இல்லாவிடில் அதுவொரு நகைச்சுவையாக மாறிவிடும்.

விக்கெட்டில் பந்து படுவது மீள்பரிசீலனையில் தெளிவாக தெரியும் போது அதற்கு நடுவரின் தீர்ப்பு தேவையில்லை. இவ்வாறு ஆட்டமிழப்பு வழங்குவது நீண்டநாட்களாகிவிட்டது.

இந்நிலையில் இலங்கை அணி   எவ்வித பிரயோசனமற்ற மீள்பரிசீலனை முறைகளை இழந்து சவால்களை சந்தித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41