கிளிநொச்சியில் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரதத்தில்  ஈடுப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுக்கலந்துரையாடியுள்ளதுடன் வரிஅறவீடு தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனத் தெரித்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஆதன வரி அறவீட்டை எதிர்த்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் மூன்றாவது நாளாகவும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இன்று (25-01-2020) காலை 7மணிக்குச் சென்று பார்வையிட்டுக் கலந்துரையாடியுள்ளதுடன் வரிஅறவீடு தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனத் தெரித்துள்ளனர்.

வரியைக்  குறைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக உண்ணா விரதத்தில் ஈடுபடும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.