கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா  அதிபர் பூஜித் ஜயசுந்தர ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அவர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் பகிரங்க சாட்சி பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.