மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இவ்வருடம் 2020 ஜனவரி 03 ஆம் திகதி தொடக்கம் 17 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 248 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாரம் மட்டக்களப்பு பிரிவிலேயே இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இந்த பிரிதேசத்திலே அதிக நோயாளர்கள் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)