(எம்.எப்.எம்.பஸீர்)

எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்றின் நீதிபதியாக இருந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள உத்தரவு சட்டத்துக்கு முரணானது எனக் கூறி கொழும்பு நீதிவான் நீதிமன்றின் சட்டத்தரணிகள் இன்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று நண்பகல் புதுக்கடையிலுள்ள நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக சட்டமா அதிபருக்கு எதிரான பதாதைகளைத் தாங்கி அவர்கள் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

' பிலப்பிட்டியவுக்கு அமுல் செய்யும் சட்டம் தில்ருக்ஷிக்கு எங்கே ? , நீதி நியாயம் சட்டமா அதிபரின் மலர் சாலை இல்லை, சட்டமா அதிபரின் அச்சுறுத்தலிலிருந்து மேல் நீதிமன்றங்களை பாதுகாப்போம், தப்புல அசை போடுகிறார்' போன்ற வாசகங்கள் அடங்கிய தமிழ் சிங்கள ஆங்கில பதாதைகளை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தினை சட்டத்தரணிகள் முன்னெடுத்தனர்.